மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தை 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் இனிப்பு, மரக்கன்று வழங்கினர். மதுரையை சுற்றியுள்ள உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். தினசரி சராசரியாக ரூ.8 லட்சம் வரை விற்பனை நடைபெறுகிறது.