திருச்சியில் இருந்து சபரிமலைக்கு அரசு சொகுசு பேருந்து இயக்கப்படவுள்ளது. இன்று (நவ., 15) முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து திண்டுக்கல், தேனி வழியாக சபரிமலைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்து இயக்கப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன் இந்த பேருந்துகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in மற்றும் செயலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.