திருச்சி சைக்கிள் மீது பைக் மோதி விபத்து; முதியவர் பலி
திருச்சி பெட்டவாய்த்தலை பழங்காவிரி பகுதியை சேர்ந்தவர் முதியவர் ராசு வயது 64 நேற்று(நவ.22) சைக்கிளில் பெட்டவாய்த்தலையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் ராசி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுனரான அந்தநல்லூரை சேர்ந்த வினோத்திடம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.