பிரதம மந்திரியின் 'கிஷான் யோஜனா' என்ற திட்டத்தின் பெயரில் மோசடி செயலியை உருவாக்கி அதனை வாட்ஸ்அப் மூலம் மோசடி கும்பல் பகிர்கிறது. இந்த செயலியின் லிங்கை தொடுவதன் மூலம், பெயர், ஆதார் எண், பான் கார்டு, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மோசடி கும்பல் கைவசம் சென்றுவிடுகிறது. இந்த தரவுகள் மூலம் UPI செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மோசடி கும்பல் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் இந்த மாதம் 7 புகார்கள் 'சைபர் கிரைம்' போலீசாருக்கு வந்துள்ளது.