மழைக்காலத்தில் அதிக எடையுள்ள துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். துணிகளை உலர்த்தும் முன் அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வெளியிடங்கள் செல்வதற்கு தேவைப்படும் துணிகளை மட்டுமே துவைக்கலாம். மழைக்காலங்களில் வீட்டிற்குள் துணிகளை காய வைப்பதால் அங்கு வசிப்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏர் பியூரிபையர் பேக் பயன்படுத்தலாம்.