ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தை போல் இலங்கையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் 4,41,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 38,594 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.