தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை, அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும், “மாணவச் செல்வங்களே மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தேர்வு எழுதுங்கள்” என வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார்.