தமிழகத்தில் தினமும் 35 லட்சம் கிலோ அளவுக்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ 84 ரூபாயாக இருந்தது. இது நேற்று முன்தினம் (மார்ச். 01) 18 ரூபாய் உயர்ந்து, 102 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ”கறிக்கோழி உற்பத்தி 20 சதவீதம் சரிந்துள்ளது, இது மேலும் சரிந்து கொள்முதல் விலை உயரும்" என்றார்.