வீட்டருகில் சிறுநீர் கழித்த ஆண்.. கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்

52பார்த்தது
வீட்டருகில் சிறுநீர் கழித்த ஆண்.. கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்
சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஜஸ்டின் அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து கோபமடைந்த வீட்டில் இருந்த மகாலட்சுமி என்ற இளம்பெண் அவரிடம் தட்டி கேட்ட போது ஜஸ்டின் அநாகரீகமாக திட்டினார். இந்த கோபத்தில் மகாலட்சுமி கொதிக்கும் வெந்நீரை ஜஸ்டின் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த ஜஸ்டின் மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி