“துணிச்சலுடன் தேர்வு எழுதுங்கள்” - மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

83பார்த்தது
“துணிச்சலுடன் தேர்வு எழுதுங்கள்” - மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். அருமையாகத் தயாராகியிருப்பீர்கள். உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. தேர்வை சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் முழுக் கவனமும் இருக்கட்டும். முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி