கேரளம்: ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனுக்கு மது, பணம் மற்றும் உணவு கொடுத்து கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். இது தொடர்பான புகாரில் கைதான தாமோதரன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.