திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள விராகலூரை சேர்ந்தவர் பால் தாசர் வயது 65. இவர் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தனது மகன் அந்தோணி ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மகனை பார்த்துவிட்டு மீண்டும் விராகலூருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் அங்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது மகன் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காதால் தனது தந்தையை காணவில்லை என அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.