முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா.

66பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா.
விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்திராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ என். கே பெருமாள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு அதிமுக கழக கொடி ஏற்றினார்கள்.
இந்நிகழ்வில் ஜேபேரவை செயலாளர் என். கே. வரதராஜபெருமாள், அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், மகளிர் அணி சாந்தி, பிரியா உட்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி