தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செப்.,19) மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தில் நேற்று (செப்.,18) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்து இருந்ததை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.