விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பரபரப்பு

64பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்

ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாக பயிர் காப்பீடு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்து அடித்து வருகிறது மேலும் பயிர் காப்பீடு ஒரு பகுதி விவசாயிகளுக்கு 10 ஆயிரம் என்றும் மற்றொரு பகுதி விவசாயிகளுக்கு ரூபாய் 200 என்றும் குளறூபடியாக பயிர் காப்பீட்டை அறிவித்துள்ளது

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முறையாக இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விட்டால் சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி