தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (செப்.,12) தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திதினார்.
அதன் பின் மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்படங்கள் மற்றும் மகாகவி பாரதியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார்கள். மேலும், மகாகவி பாரதியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது குறிப்புகளைப் பதிவு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மின்னணு நூலகத்தில் அன்னாரது படைப்புகள் மற்றும் படங்களைப் பார்வையிட்டார்
3கி. ராஜநாராயணன் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புகைப்படங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார். மேலும், கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது குறிப்புகளைப் பதிவு செய்தார்.