சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை: மீனவர்கள் கோரிக்கை

79பார்த்தது
சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை: மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்வளத்தை அழித்திடும் வகையில், நைட்ரஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி மீன்பிடிக்க முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தூய ஆவி நாட்டுப்படகு மீனவர்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "பாரம்பரியமாக தூண்டில் மூலம் கணவா மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் சங்குளிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிர்ப்பில்லாத வெள்ளை சங்குகளை மட்டும் எடுக்கிறோம் என கூறிக்கொண்டு சட்டவிரோதமாக நைட்ரஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி (Air compressor) மன்னார் வளைகுடா பகுதி அரிதான பவளப்பாறைகளை சேதப்டுத்தி உயிருடன் உள்ள மீன் இனங்களை குரையாடுகின்றனர்.

குறிப்பாக கணவா மீன்கள் பவளப்பாறைகளை சுற்றியே முட்டையிட்டு குஞ்சுகளை பொறிக்கும் ஆனால் இவர்கள் அதன் இனப்பெருக்க இடத்திற்கே கடலுக்குள் சென்று கணவா மீன்களை அதிகளவில் வேட்டையாடுகின்றனர். இதனால் பாரம்பரியமாக தூண்டில் தொழிலில் கணவா மீன்களை பிடித்து வயிற்றுபிழைப்பு நடத்திவரும் எங்களைப்போன்ற சிறுதொழில் மீனவர்கள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி