திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லட்டு தயாரிக்க தரம் குறைந்த நெய்யை விற்பனை செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்நிறுவனத்தில் சோதனை நடத்தினர் என்பது குறிபப்பிடத்தக்க தகவல்.