மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது என தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். 2015.51 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது.