நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலன் ஆஜர்!

78பார்த்தது
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இன்று வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி ஐயப்பன் தலைமையில் வந்தது இன்று வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி தம்பிகள் மற்றும் ஒரு மகன் ஆஜராகாத நிலையில் இரண்டு மகன்களான ஆனந்த மகேஸ்வரன் மற்றும் ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்

இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது தொடர்பாக அரசு தரப்பு சாட்சியாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் சேர்க்கப்பட்டிருந்தார் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க மாவட்ட நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது

இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜரானார் அவரிடம் அரசு தரப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்

இதையடுத்து முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி