நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருவது அனுகிரஹா
தொண்டு நிறுவனம் இந்த தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த மகளிர் குழு பெண்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஒரு லட்ச ரூபாய், 50, 000, பத்தாயிரம் என கடன் வழங்கப்பட்டு ஒரு லட்சத்திற்கு 8000 ரூபாய் கமிஷன் என வாங்கி கடன் வழங்கி வந்துள்ளது. இந்த பணியில் ஏராளமான அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாசரேத் திருச்செந்தூர் நெல்லை மாவட்டம் இடையன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவப் பெண்கள் உள்ளிட்டோரிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்த நபர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் அனுக்கிரஹா நிறுவனத்தை தொடர்பு கொண்டு தூத்துக்குடி மாவட்டம் இடைச்சி விளையைச் சேர்ந்த சுந்தரவேல் மற்றும் மூக்குபீரியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் அவர்களுக்கு எந்தவித பணத்தையும் அளிக்க மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் மகளிர் குழு பெண்கள் சிலருடன் அனுகிரஹாதொன்டு நிறுவனம் மகளிர்க்கு கடன் வழங்கிவிட்டு தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.