வஉசி பொறியியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

62பார்த்தது
வஉசி பொறியியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
தூத்துக்குடியில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள வஉசி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் பீட்டர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. துறைத் தலைவர் சித்ரலேகா முன்னிலை வகித்தார்.

பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை இயக்குனர் எம். ஏ. தாமோதரன் கலந்து கொண்டு, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மாணவ மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, பாதிப்புக்குள்ளானவர்களை மீட்டெடுத்து முதலுதவி அளித்து எவ்வாறு அவர்களை மருத்துவமனைகளுக்கும், பாதுகாப்பு முகாம்களுக்கும் அழைத்து செல்வது என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தார்.

தொடர்புடைய செய்தி