தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி பேசும்போது
பாஜகவினர் காதுகாளில் தமிழ்நாட்டில் என்ன குரல் எழும்புகின்றது என்று கேட்கும் நிலைதான் உள்ளது எனவே முதல்வர் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் டெல்லியில் இருக்ககூடியவர்கள் காதுகளில் கேட்டு அங்கு இருக்கக்கூடிய அரசின் அடிதளத்தை அசைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார். மேலும் மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனட்டி அரசாங்க அமர்ந்துள்ளது இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார் ஆந்திரா தலைவர்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்.