வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவிலில் சாமி முன் தொழிலாளி தற்கொலை முயற்சி செய்ய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபாலபுரம் பகுதியில் உள்ள கொங்கையம்மன் கோவிலில் கட்டிட மேஸ்திரி மனோகரன் என்பவர் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனோகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்