திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி உயிரிழந்தனர். வேலூர் - தி.மலை சாலையில் ஸ்ரீதர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், ஸ்ரீதர் மற்றும் சங்கீதா உயிரிழந்த நிலையில், காயமடைந்த அவர்களது மகன் அஜய் மற்றும் மகள் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.