அதிக கொழுப்புள்ள உணவு ஐஸ்க்ரீம். இதில் பால் கொழுப்பு (Milk Fat) அதீதமாக உள்ளது. இது ஒரு நிறைவுற்ற கொழுப்பாகும். ஒருவருக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பட்சத்தில், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இது, இதயக்கோளாறுகள், பக்கவாதம் ஆகியவை வருவதற்கு வழிவகுக்கும். அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடல் எடையைக் கூட்டி பல உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.