தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது சொந்த படங்களுக்கு அவரே கதைகளை எழுதி வருகிறார். முதன்முறையாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதையை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, ஷங்கர் சார் என்னிடம் ஏதேனும் கதைகள் இயக்க முடியுமா? என கேட்டது எனக்கு பெருமையாக இருந்தது. ‘கேம் சேஞ்சர்’ நான் இயக்க முடியாது என்று எனக்குத் தெரியும், ஷங்கர் சார் தான் பொருத்தமாக இருப்பார் என எனக்குத் தெரியும்” என்றார்.