இயற்கை சீற்றங்களினால் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தவும், தமிழக முதலமைச்சர்அவர்களின் உத்தரவின்படி 2024-25-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி திருந்திய பயிர்காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு அதற்கான இணைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 222 குறு வட்டாரங்களில் கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, நெல் மற்றும் பருத்தி பயிர்கள் பயிர்காப்பீடு செய்ய அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோளப் பயிருக்கு கருங்குளம், கயத்தார், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், திருவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் பயிர் காப்பீடு செய்ய 255 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது
மேலும, உளுந்து மற்றும் பாசிப்பயிறுக்கு 15. 11. 2024 கடைசி நாளாக இருப்பதால் விவசாயிகள் விரைந்து பயிர்காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.