இளஞ்சிறார்களை கவனமாக கையாள வேண்டும்; எஸ்பி அறிவுறுத்தல்!

81பார்த்தது
இளஞ்சிறார்களை கவனமாக கையாள வேண்டும்; எஸ்பி அறிவுறுத்தல்!
இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது காவல் துறையினர் அவர்களை கவனமாக கையாள வேண்டும், விசாரணையில் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து ‘குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான (Child Welfare Police Officer) திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்ந்து ‘மாற்றத்ததை தேடி’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி