அமெச்சூர் வெயிட் லிப்டிங் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்வு!

73பார்த்தது
தூத்துக்குடி தமிழ்நாடு அமெச்சூர் வெயிட் லிப்டிங் அசோசியேசன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்பு மாநில தலைவராக ராஜேஷ் ரவிச்சந்தர் தேர்வு கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் பங்கேற்க நடவடிக்கை என தகவல்


தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு அமெச்சூர் வெயிட் லிப்டிங் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை பதவிக்காலத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க அப்சர்வர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அமெச்சூர் மாநில தலைவராக ராஜேஷ் ரவிச்சந்திரன் செயலாளராக வழக்கறிஞர் எஸ் எஸ் பி அசோக்கும் பொருளாளராக விஜய்யும் தேர்வு செய்யப்பட்டனர்

பின்னர் மாநிலத் தலைவர் ராஜேஷ் ரவிச்சந்திரன் கூறுகையில் தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு பளு தூக்கும் பயிற்சி அளித்து அவர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழக அரசும் மாவட்டம் தோறும் சிறந்த பழு தூக்கும் வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி