விழுப்புரம்: கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த 32 வயது பெண் அரசு ஊழியரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதை ஆன் செய்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடியோ காலில் தோன்றிய வாலிபர் ஒருவர், திடீரென்று தன்னுடைய ஆடைகளை கழட்டி நிர்வாணமாக நின்றுள்ளார். இதையடுத்து, காலை கட் செய்த பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்த வீடியோ கால் வந்துள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.