கடல் சார்ந்த அலைகள் சாதகமற்று இருப்பதினாலும், கடலில் இருந்து வறண்ட காற்றும், வளிமண்டலத்தில் வறண்ட வானிலை நீடிப்பதினாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும், இந்த மாத இறுதிக்குள் பனிப்பொழிவு முற்றிலும் குறைந்து, வழக்கத்தை விட 3-5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.