முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்திலேயே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், அதற்குப் பிறகு கடல் சார்ந்த அலைவுகள் சற்று சாதகமாக இருப்பதால் கோடை மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மழை காரணமாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.