மீன் பதப்படுத்தும் ஆலையை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ளது பொட்டலூரணி கிராமம் இந்த கிராமத்தை சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் அமைந்துள்ளது இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் பொட்டலூரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வயல்வெளிகளில் விடுவதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த மீன் கழிவு ஆலைகளை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் காவல்துறை போராட்டம் நடத்தி வரும் பொது மக்கள் மீது பி சி ஆர் வழக்கு உள்ளிட்ட ஏராளமான பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இன்று தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் காவல்துறையினர் போட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி