கோரம்பள்ளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்!

78பார்த்தது
கோரம்பள்ளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்!
தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோரம்பள்ளம் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

      

இது தொடர்பாக சமூக ஆர்வலர் பாலசந்தர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் உள்ள கோரம்பள்ளம் கிராமம் தற்போது மக்கள் வாழ தகுதியற்ற கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெரும் வெள்ளத்திற்கு பிறகு ஊரின் முகப்பு பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த  பெரியோர்கள் வரை செல்ல தகுதியற்ற சாலையாக உள்ளது. கழிவுநீர் வடிகால்கள் இருந்தும், பட்டா இடத்தில் கழிவுநீர் தேங்கும் அவல நிலை உள்ளது.  


தனியார் அட்டை கம்பெனி ஒன்று அதன் நுழைவு வாயிலில் டிரான்ஸ்பார்மர் அமைத்து அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக ஆபத்தான முறையில் அமைந்துள்ளது. கோரம்பள்ளம் குளக்கரையில்  குப்பைகளை கொட்டி தீ வைத்து குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் அசுத்த காற்று சுவாசிக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி  போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி