காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து போராட்டம்!

74பார்த்தது
அரசு மதுபான கடைகளில் மது குடிக்கும் மது பிரியர்கள் வெளியே வாங்கி மது அருந்தும் போதும் பகல் நேரங்களில் கள்ளச் சந்தையில் மது வாங்கி அருந்தும் போதும் மது பாட்டில்களே அப்படியே பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சாலைகளில் வீசி செல்வதால் பாட்டில்கள் உடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாவதுடன் விலங்குகள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கு தமிழக அரசு உடனடியாக கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மது பாட்டில்கள் வெளியே வீசுவதை தவிர்க்கும் வகையில் மதுபான கடைகளிலேயே பத்து ரூபாய்க்கு திரும்ப பெறுவது போன்று தமிழக முழுவதும் திரும்ப பெற நடவடிக்ககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் பாலகிருஷ்ணன் காலி மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்தது தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மரக்கன்று மற்றும் விழிப்புணர்வு பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி