முத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா!

69பார்த்தது
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயம் பழமையான இந்த ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று காலை எட்டு மணி முதல் 9 மணிக்குள் நடைபெற்றது மகா மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு பிம்ப சுத்தி, மூர்த்தி ரசோபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்று பின்னர் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது

இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்து விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளான கைலாசநாதர், ஆஞ்சநேயர் , ஐயப்பன் , சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை , நாகராஜர், நடராஜர் ஆகிய தெய்வங்களுக்கு புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் மூலம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்து விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளை தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி