மாதா சப்பர பவனி; பக்தர்கள் நூதன வழிபாடு!

54பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கிராமத்தில் 467 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயம் உள்ளது. இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மோட்ச ராக்கினி மாதா சிலை இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள், அன்னைக்கு உயர் வணக்கம் மற்றும் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயத் திருவிழா பங்குத்தந்தை வினிஸ்டன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அதன் பின்னர் திருத்தேர் பவனி அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மோட்ச ராக்கினி மாதா பவனி வந்தார். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர் கீழே வைப்பார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிப்பிக்குளம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது இந்த தேரில் பின்னால் ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கும்பிடு சரணம் என்ற வேண்டுதலை நிறைவேற்றினார்கள்

இத்திருவிழாவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் 467-வது பெருவிழாவை முன்னிட்டு அறுசுவை அசைவ விருந்து அனைவருக்கும் சிறப்பு அசன விருந்தாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி