லாரி விபத்தில் லோடு மேன் பலி: 2பேர் காயம்!

53பார்த்தது
தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் லோடுமேன் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஆறுமுகமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் பாலமுருகன் (38). லாரி டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து பலகைகளை ஏற்றுக்கொண்டு தூத்துக்குடிக்கு லாரியை ஓட்டி வந்தார். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திருவனந்தபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் ஆனந்த் (24), கனகராஜ் மகன் சிம்பு (19) ஆகியோர் லாரியில் லோடுமேனாக வந்தனர்.

இந்த லாரி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோடு மடத்தூர் அருகே வரும்போது ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்த் பரிதாபமாக இறந்தார். பாலமுருகன், சிம்பு ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி