பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து-சிவகாசியில் பரபரப்பு

81பார்த்தது
பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து-சிவகாசியில் பரபரப்பு
சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் பட்டாசு குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியிலுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி