நீட் தேர்வில் குளறுபடி: மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

82பார்த்தது
நீட் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அழகர் பள்ளி மற்றும் ஆறுமுகநேரி கமலாவதி பள்ளி ஆகிய இரண்டு நீட் தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு மற்ற இந்தியா முழுவதும் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட வினாத்தாள் வழங்கப்பட்டது. மேலும் மிகவும் கடினமாக இருந்தாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது நீட் தேர்வு குளறுபடி எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் ஏற்கனவே தமிழக அரசு மற்றும் நீட் தேர்வு ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில் கடந்த நான்காம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் வினாத்தாள் கடினமாக இருந்ததால் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இன்று பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நீட் தேர்வு ஆணையம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு தனி கட் ஆப் மற்றும் கவுன்சிலிங் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.