பாலத்தில் சிக்கிய கனரக லாரி: போக்குவரத்து பாதிப்பு

1078பார்த்தது
தூத்துக்குடி அந்தோணியாா்புரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் கனரக லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது அந்தோணியாா்புரத்தில் உள்ள தூத்துக்குடி-பாளை. தேசிய நெடுஞ்சாலையில் பாலம் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அதே இடத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வானங்கள் சென்று வருகின்றன. மழை வெள்ளம் ஏற்பட்ட 6 மாதங்களாகியும் இதுவரை பாலம் அமைக்கப்படவில்லை.  

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கூடங்குளத்திற்கு காற்றாடி ஏற்றி சென்ற கனரக லாரி அந்தப் பாலத்தில் செல்ல முடியாமல் நேற்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீண்ட போராட்டத்திற்கு பின்னர் லாரி அந்தப் பாலத்தில் இருந்து வெளியே வந்தது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி