வெள்ள நிவாரண பொருட்கள்: கனிமொழி எம். பி. வழங்கினார்

570பார்த்தது
வெள்ள நிவாரண பொருட்கள்: கனிமொழி எம். பி. வழங்கினார்
ஓட்டப்பிடாரம் பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம். பி. வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், தெற்கு கல்மேடு, துரைச்சாமிபுரம், பட்டினமருதூர் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம். எல். ஏ தலைமை தாங்கினார்.  


இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கனிமொழி எம். பி. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், தி. மு. க. விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் ராமலட்சுமி, பாலமுருகன், முத்துமணி, இமாம், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி