போதைபொருள் இல்லாத மாவட்டம் உருவாக்க முயற்சி டிஎஸ்பி பேச்சு

79பார்த்தது
போதைபொருள் இல்லாத மாவட்டம் உருவாக்க முயற்சி டிஎஸ்பி பேச்சு
தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநல மறுவாழ்வு மையம் சார்பில் உலக போதை எதிர்ப்பு தின சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். நிஷா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் முகமது ஷா நவாஸ் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில் இளந்திரையன் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளர் பேசும்போது "தூத்துக்குடி மாவட்டம் போதை இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மது போதைக்கு அடிமையானவர்களை மீட்டு இதுபோன்ற மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் ஓழிப்பில் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் கதிர்வேல், சமூகத் திட்ட இயக்குனர் தனிஷா ஷாப்ரா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்பெர்ட், சென்னை வழக்கறிஞர் ராஜசேகர் ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் நிர்வாக சபை சாகுல் ஹமீது, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி