கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் தமிழகம் மட்டும்மில்லாமல் இந்தியாவையே உலுக்கியது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும் இதற்கு காரணமான தமிழக அரசு மற்றும் மெத்தனப்போக்காக செயல்பட்ட காவல் துறையை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் மற்றும் மீனவ பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்


இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மேலும் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி