இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரளாவின் திருவல்லம் பரசுராமர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களின் திருமண தடை, பொருளாதார தடைகள் நீங்குகிறது. இங்கு பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை ஒன்றும் இருக்கிறது.