மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய மசோதாவுக்கு தமாகா தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் ஆதரவு அளித்த நிலையில், பாமக தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 4 பேரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இன்று (ஏப்., 04) நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேறியது. 128 பேர் ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.