நடிகர் விஜய் பிறந்தநாள்; சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

67பார்த்தது
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் 2026 ஆண்டு ஜோசப் விஜய் எனும் நான் என முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது இந்நிலையில் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து தனது பிறந்த நாளை எளிய முறையில் கொண்டாட தனது கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் பாலா தலைமையில் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பாகம் பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதியில் நடிகர் ஜோசப் விஜய் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் 2026 ஆம் ஆண்டு ஜோசப் விஜய் என்னும் நான் என முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.


இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி