ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு!

2621பார்த்தது
ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு!
கோவில்பட்டி அருகே ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா் மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ரா. காளிராஜ் (42). பள்ளி ஆசிரியா். இவா் குடும்பத்தினருடன் கடந்த மாதம் 29ஆம் தேதி கழுகுமலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினாா்களாம்.  


அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 9 பவுன் தங்க நகைகள், 2 செட் வெள்ளி கொலுசுகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு பொருள்கள் ஏதும் திருடு போகவில்லை. இதுகுறித்து காளிராஜ் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி