பீகார் மாநிலம் முசாபர்பூரில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கொடூரமான கொலை நடந்தது. அஃப்ரோஸ் காத்ரி என்ற நபர் ராம்பாக் சௌக்கில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டனர். இதில், அஃப்ரோஸ் காத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. இந்த கொலையின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.